உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2.52 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2.52 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி:ஓசூர் தனியார் நிறுவன ஊழியரிடம், முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக கூறி, 2.52 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பஸ்தி இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சதீஷ், 39, தனியார் நிறுவன ஊழியர். கடந்த பிப்.,15ல், இவரது மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதி நேர வேலை என்று கூறி, சில லிங்க்குகளை அனுப்பினர். அதை லைக் செய்த சதீஷூக்கு சிறதளவு பணம் கிடைத்தது. இதையடுத்து, முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும், உங்கள் பணம் இரட்டிப்பாகும் என கூறப்பட்டிருந்தது-.இதை நம்பி சதீஷ், அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்குக்கு 2.52 லட்சம் ரூபாயை அனுப்பினார். ஆனால் சதீஷுக்கு எந்த தொகையும் வரவில்லை. இதனால் சநதேகமடைந்த சதீஷ், அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது-.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை