உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு அருங்காட்சியகத்தில் மாணவியருக்கு கல்வெட்டு பயிற்சி

அரசு அருங்காட்சியகத்தில் மாணவியருக்கு கல்வெட்டு பயிற்சி

அரசு அருங்காட்சியகத்தில் மாணவியருக்கு கல்வெட்டு பயிற்சிகிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், கல்லுாரி மாணவியருக்கு, 2 நாள் குறுகிய கால கல்வெட்டு பயிற்சி நேற்று துவங்கியது. இது குறித்து, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில், தர்மபுரி மாவட்டம் மல்லுப்பட்டியில் உள்ள மூகாம்பிகை கல்லுாரியின் தமிழ் மற்றும் வரலாற்றுத்துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவியர், 60 பேருக்கு, 2 நாள் குறுகிய கால கல்வெட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முதல் நாளில், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், தமிழ் எழுத்துக்களின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவை கற்று தரப்பட்டது.தொடர்ந்து, அருங்காட்சியகத்திலுள்ள சோழர் காலத்தை சேர்ந்த, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டை படியெடுத்து படிக்கும் பயிற்சி தரப்பட்டது. 2வது நாளில், களப்பயணமாக காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரமடம் சிவன் கோவிலுக்கு மாணவியரை அழைத்துச்சென்று, கோவில் மற்றும் சிற்பக்கலை குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெறும் மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சியை, அரசு அருங்காட்சியக, முன்னாள் காப்பாட்சியர் கோவிந்தராஜ் அளித்து வருகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்