உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தி ரூ.9 லட்சத்தில் நலத்திட்ட உதவி

தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தி ரூ.9 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகாவில், டி.ஆர்.ஓ., சாதனைகுறள் தலைமையில் கடந்த, 14ல் ஜமாபந்தி துவங்கி, நேற்று வரை நடந்தது. மொத்தம், 1,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இறுதி நாளான நேற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.டி.ஆர்.ஓ., சாதனைகுறள் தலைமை வகித்து, 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 11 பேருக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், 12 பேருக்கு நத்தம் பட்டா, 2 பேருக்கு வாரிசு சான்று, ஒருவருக்கு இறப்பு சான்று, 12 பேருக்கு பட்டா மாறுதல் என மொத்தம், 50 பேருக்கு, 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாசில்தார் பரிமேல் அழகன், தனி தாசில்தார் மோகன்தாஸ், துணை தாசில்தார்கள் சக்திவேல், சுபாஷினி, மதன்ராஜ், ஜனனி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ