மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
20-Dec-2025
அதியமான் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
20-Dec-2025
ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்
20-Dec-2025
டவுன் பஸ்கள் சேவை துவக்கம்
20-Dec-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டின் இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழை பெய்ததால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன், 4 முதல், பிப்., 6 வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் இருந்தது. பின் மழையின்றி, 248 நாட்களுக்கு பிறகு பிப்., 7ல் அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில், 49.95 அடியாக சரிந்தது. கடந்த பிப்., 8ல் அணைக்கு வினாடிக்கு, 32 கன அடி நீர்வரத்து இருந்தது. பின் மழையின்றி நீர்வரத்து சரிந்து வந்த நிலையில், கடந்த, 9ல் இந்தாண்டில் முதல் முறையாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. பின்னர், 12 முதல், 22 வரை நீர்வரத்தான நிலையில், இந்தாண்டில், 2வது முறையாக நேற்று அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. அணை நீர்மட்டம் நேற்று, 45 அடியாக சரிந்தது. பாசனத்திற்காக வாய்க்காலில், 169 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது.மாவட்டத்தில் கடும் வெப்பபத்தால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் பல இடங்களில் நீரின்றி பாறையாக காட்சியளிக்கிறது.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025