உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 3 பேர் தற்கொலையில் கூலித்தொழிலாளி கைது

3 பேர் தற்கொலையில் கூலித்தொழிலாளி கைது

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, கடன் மற்றும் குடும்ப பிரச்னையில், 2 மகள்களுடன் தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் ரமேஷை பர்கூர் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்ன பர்கூரை சேர்ந்தவர், ரமேஷ், 45, கல் உடைக்கும் தொழிலாளி; இவர் மனைவி உஷா, 37; இவர்களுக்கு நிவேதா, 17, ஷர்மிளா, 13 என்ற இரு மகள்கள் இருந்தனர். கடன் பிரச்னையால், குடும்பத்திற்குள் பிரச்னை இருந்துள்ளது. நேற்று முன் தினம் ரமேசுக்கும், உஷாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த உஷா, தன் இரு மகள்களுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, பர்கூர் போலீசார் தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிந்து, ரமேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை