உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மகன் கொலையான 20 நாளில் தாயும் சாவு

மகன் கொலையான 20 நாளில் தாயும் சாவு

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கே.சவுளூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 19; எலக்ட்ரீஷியன். அதே ஊரை சேர்ந்தவர் மதன், 20, டிராக்டர் டிரைவர்; இவர்களின் குடும்பங்கள் அருகருகில் வசித்து வந்த நிலையில், தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 10ல் மதன், தமிழ்செல்வனை கத்தியால் குத்தி கொன்றார். இவ்வழக்கில் மதனை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, தமிழ்செல்வனின் தாய் சரசு, வீட்டில் துாக்கில் தொங்கிய படி இறந்து கிடந்துள்ளார். நேற்று மாலை வீட்டிற்கு வந்த அவரது கணவர் கோவிந்தராஜ், மனைவி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.காவேரிப்பட்டணம் போலீசார் சடலத்தை மீட்டனர். மகன் கொலையான சம்பவத்தால் மனமுடைந்து சரசு, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை