உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்

பள்ளி, கல்லுாரி மாணவியர் மாயம்

கிருஷ்ணகிரி, ஆக. 23-காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் யேஷ்கா, 21, இரண்டாமாண்டு கல்லுாரி மாணவி. கடந்த, 19ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் காவேரிப்பட்டணம் போலீசில் புகாரளித்தனர். அதில், காரிமங்கலத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.சூளகிரியை சேர்ந்தவர், 16 வயது பிளஸ் 1 மாணவி. கடந்த, 20 முதல் அவரை காணவில்லை. இது குறித்து பெற்றோர் சூளகிரி போலீசில் புகார் செய்தனர். அதில் மாரண்டப்பள்ளியை சேர்ந்த வினோத், 21 என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ