உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அடுத்தடுத்து இரு கடைகளில் திருட்டு

அடுத்தடுத்து இரு கடைகளில் திருட்டு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, சந்துார் கூட்ரோடு பகுதியில், மத்துார் செல்லும் சாலையில், பூனையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குமார், 46, மாரியப்பன், 42, இருவரும் அருகருகே குமரன் ஹார்-டுவேர்ஸ், எம்.எஸ்.ஹார்டுவேர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் குமரன் ஹார்டுவேர்ஸ் கடையில், 40 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும், எம்.எஸ்.ஹார்டுவேர்ஸ் கடையில் 2,000 ரூபாய், 3,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்க-ளையும் திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலை குமார், மாரி-யப்பன் இருவரும் கடையை திறந்தபோது, மேற்கூரை துளை-யிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போச்சம்பள்ளி போலீசார், அங்கிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சி-களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை