கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடத்தப்படும், அகில இந்திய மாங்கனி கண்-காட்சிக்கு, 3வது முறையாக இடத்தை ஆய்வு செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது கண்காட்சி நடத்தப்படுமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிகளவில் மா சாகுபடி நடக்கிறது. மா விவசாயிகளை ஊக்குவிக்க கடந்த, 1992 முதல், அகில இந்-திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. மா விவசாயிகளுக்-காக தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, நாளடைவில் பொழுது-போக்கு அம்சத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியாக மாறியது. ஆண்டுதோறும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டு வந்த இந்த கண்காட்சிக்கு, கடந்த இரு ஆண்டுகளாக பிரச்னை இருந்தது. தற்போது, மா சீசனே முடிந்த நிலையில், மாங்கனி கண்காட்சி நடத்தவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். நடப்பாண்டில் மாங்கனி கண்காட்சி நடத்த, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகிலுள்ள மைதானம் தேர்வு செய்து, அரங்குகள், கடைகள் அமைக்க இ-டெண்டர் விடப்பட்டது. அங்கு கண்-காட்சி நடத்துவதால், தேசிய நெடுஞ்சாலையை கடந்து, மக்கள் வருவது சிரமம் என்பதாலும், நகருக்குள் இல்லாத இடமாக, மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மாங்கனி கண்காட்சி, அரசுக்கு சொந்த-மான இடத்தில் நடத்த, பா.ஜ., கட்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தது. கண்காட்சியில், ஆளுங்கட்சியினர் சம்பாதிக்கும் வகையில், டெண்டர் விடவேண்டும். இ-டெண்டர் வைத்தால், வெளியூர்கா-ரர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும் என, தி.மு.க.,வினர் கூறு-வதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.மா விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கைகள் மட்-டுமே நடப்பதாகவும், முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியல்வாதிகள், அலுவலர்கள் செயல்படுவதா-கவும், விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.