உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த 40 குரங்குகள் பிடிப்பு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த 40 குரங்குகள் பிடிப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.மேலும் வாரத்தில் திங்கள்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பொதுமக்களும், விவசாய குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க விவசாயிகள், பயனாளிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கலெக் டர் அலுவலக வளாகத்தில் நாளுக்கு, நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆவின் பாலகம் எதிரே நிறுத்தப்படும் டூவீலர்களில் உள்ள கவர்களை பிய்த்து போடுவதும், ஆவணங்களை எடுத்து வெளியில் வீசியும் சென்றன. இது குறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள், விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 2 நாட்களாக கூண்டுகள் அமைத்து, அங்கு சுற்றிய, 40 குரங்களை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர், வேப்பனஹள்ளி அடுத்த கொங்கனப்பள்ளி காப்புக்காட்டில் குரங்களை பாதுகாப்புடன் கொண்டு சென்று விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை