உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காதல் திருமணம் செய்த மகன், தடுத்த தாயை வெட்டி கொன்றவருக்கு இரட்டை ஆயுள்

காதல் திருமணம் செய்த மகன், தடுத்த தாயை வெட்டி கொன்றவருக்கு இரட்டை ஆயுள்

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனையும், தடுக்க வந்த தன் தாயையும் கொன்றவருக்கு, இரட்டை ஆயுள் தண்-டனை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதியை சேர்ந்தவர் சுபாஷ்,28; எம்.பி.ஏ., பட்டதாரி. கடந்த, 2023ல், திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தபோது, அங்கு பணிபுரிந்த அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசியா,25, என்பவரை காதலித்தார். அவர் வேறு சமூ-கத்தை சேர்ந்தவர் எனக்கூறி, அவரை திருமணம் செய்ய, சுபாசின் தந்தை தண்டபாணி,49, எதிர்ப்பு தெரிவித்தார்.எதிர்ப்பை மீறி அனுசியாவை, 2023 மார்ச், 27ல் சுபாஷ் திரு-மணம் செய்தார். மனைவியுடன் திருப்பத்தூரில் தங்கி பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிந்தார். இந்நிலையில் தண்டபா-ணியின் தாய் கண்ணம்மாள், 65, பேரன் சுபாஷை தமிழ்புத்தாண்-டிற்கு, அருணபதியில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து புதுமண தம்பதிக்கு விருந்து கொடுத்தார்.இதையறிந்து 2023 ஏப்.,15 அதிகாலை, 4:00 மணிக்கு அங்கு வந்த தண்டபாணி, மகன் என்றும் பாராமல் சுபாசையும், தன் தாய் கண்ணம்மாளையும் அரிவாளால் வெட்டினார். இதில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும் மரு-மகள் அனுசியாவிடம், 'உன்னால் தான் இவ்வளவு பிரச்னை' எனக்கூறி சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், படுகாயங்களுடன் உயிர் தப்பினார். வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை வழக்குபதிந்து ஊத்தங்கரை போலீசார், தண்டபாணியை, கைது செய்தனர்.கடந்த, 2 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி லதா வழங்கிய தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட தண்டபாணிக்கு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஒரு ஆயுள் தண்டனை, இரட்டை கொலைக்கு ஒரு ஆயுள் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் இளம்பெண்ணை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் சிறை மற்றும், 8,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த தண்டனைகள் அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராத தொகை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்ப-ளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ரமேஷ் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி