உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2ல் சாதனை

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2ல் சாதனை

ஊத்தங்கரை : ஊத்தங்கரை, அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியின் மாணவி யாஷிகா, 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி கோபிகா, 587 மதிப்பெண்கள் பெற்று, 2ம் இடமும். தர்ஷினி, 585 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடம் பெற்றுள்ளார். பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால்முருகன், முதல்வர் கலைமணி சரவணகுமார், நிர்வாக அலுவலர் கணபதிராமன், கல்லுாரி செயலாளர் ஷோபா, பள்ளி துணை முதல்வர் அபிநயா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை