உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சொத்தில் உரிமை கேட்டு பெண் தீக்குளிக்க முயற்சி

சொத்தில் உரிமை கேட்டு பெண் தீக்குளிக்க முயற்சி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, செல்லகுட்-டப்பட்டி, அனுமாகோவில்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரேவதி, 32; இவரின் கணவர் செந்தில்குமார், 2 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். செந்தில்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவரின் தந்தை ஆறுமுகம், 65, தன் இளைய மகன் பிரபுவிற்கு தன் பெயரில் இருந்த, 77 சென்ட் நிலத்தை தானசெட்டில்மென்ட் செய்துள்ளார். கணவனை இழந்த ரேவதி, 77 சென்ட் நிலத்தில், தனக்குரிய பங்கை வழங்க வேண்டு-மென கேட்டு, நேற்று போச்சம்பள்ளி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் முன், தன் உடலில் மண்-ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார், அவர் மீது நீரை ஊற்றி காப்பாற்றினர். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ