உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முட்புதர்கள், குப்பை அகற்றம்; யூனியன் அலுவலகம் பளிச்

முட்புதர்கள், குப்பை அகற்றம்; யூனியன் அலுவலகம் பளிச்

பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10, யூனியன்களில் பாப்பிரெட்டிபட்டி யூனியன் தி.மு.க., வசம் உள்ளது. தினமும் ஏராளமானோர் அலுவலகம் வந்து செல்கின்றனர். அலுவலக வளாகத்தில் குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லை. யூனியன் அலுவலகம் முட்புதர்களால் சூழப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. அலுவலர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் பயன்படுத்த போதுமான கழிவறை வசதி இல்லை. இது குறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று முன்தினம் பி.டி.ஓ., கலைச்செல்வி, துணை பி.டி.ஓ., கோபிநாத் ஆகியோர் மேற்பார்வையில், அலுவலக கழிவறைகள் பணியாளர்களை கொண்டு துாய்மைபடுத்தப்பட்டது. 10 க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள முட்புதர்கள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை