உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இரு தரப்பினர் இடையே தகராறு 5 பேர் மீது வழக்குப்பதிவு

இரு தரப்பினர் இடையே தகராறு 5 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தனப்பள்ளி, நவ. 19கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே கொம்மேப்பள்ளியை சேர்ந்த பிரசாந்த்குமார், 34, தனியார் கிரஷரில் மேலாளராக உள்ளார்; இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு பிரசாந்த்குமார் விவசாய நிலத்திலிருந்த குழாய்களை சிலர் சேதப்படுத்தினர். இதை தட்டிக்கேட்ட பிரசாந்த்குமாரை, இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதில் காயமடைந்த அவர், உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்படி, கொம்மேப்பள்ளியை சேர்ந்த கேசவரெட்டி, 55, அவரது மகன் பிரவீன்குமார், 24, மற்றும் சிவராமரெட்டி, 67, ஆகிய 3 பேர் மீது, உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்தனர். அதேபோல், தன்னையும், தனது மகன் பிரவீன்குமார், மகள் தாரணி, 20, ஆகியோரை, பிரசாந்த்ரெட்டி மற்றும் ஜெயவந்த்ரெட்டி, 36, ஆகியோர் தாக்கியதாக, உத்தனப்பள்ளி போலீசில் கேசவரெட்டி புகார் செய்தார். அதன்படி, பிரசாந்த்ரெட்டி, ஜெயவந்த்ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை