உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரேஷன்கடையில் வெளியாட்கள் பொருட்கள் வழங்கியதாக புகார்

ரேஷன்கடையில் வெளியாட்கள் பொருட்கள் வழங்கியதாக புகார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, சீனிவாசா காலனியில், கூட்டுறவு சங்கம் சார்பில் இயங்கி வரும் ரேஷன் கடையின் விற்பனையாளர் விவேக். இவர், கடந்த, 6ல் ரேஷன் கடையில் இல்லை. மாறாக அங்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர், ரேஷன் கடையில் பொருட்களை வழங்கி வந்தார். இது குறித்து உரிய ஆதாரங்களுடன் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணியிடம் புகார் தெரிவித்தார். அதன்படி கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் ஆர்.ஐ., சதீஷ் தலைமையிலான அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில், ஸ்ரீநாத் என்பவர் விற்பனையாளர் விவேக் அறிவுறுத்தல் படி, ரேஷன் பொருட்களை வழங்கியது தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரேஷன் பொருட்கள் விற்ற பணத்தை, அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், கடையில் இருப்புள்ள பொருட்களையும் சரிபார்த்து, ரேஷன் கடையை மூடிச்சென்றனர். இது குறித்து விசாரித்து, மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., பொது வினியோக திட்ட அலுவலர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி