உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் 25ல் தி.மு.க., செயற்குழு

கிருஷ்ணகிரியில் 25ல் தி.மு.க., செயற்குழு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் வரும், 25ம் தேதி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம் மற்றும் ஓட்டு எண்ணும் மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இது குறித்து கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம் மற்றும் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம் வரும், 25ம் தேதி (சனிக்கிழமை) மதியம், 3:00 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மகால் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி கலந்து கொள்கிறார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை