உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 மாதமாக மூடி கிடக்கும் மின் தகன மேடை

2 மாதமாக மூடி கிடக்கும் மின் தகன மேடை

ஊத்தங்கரை : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை டவுன் பஞ்.,ல், தன்னிறைவு திட்டம், 2016- - 20-17ல், 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அரசு பஸ் ஸ்டாண்ட் பின்புறம், தனியார் பள்ளி பங்களிப்புடன் எரிவாயு மின் தகனமேடை கட்டப்பட்டுள்ளது.ஊத்தங்கரை டவுன் பஞ்.,ல் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மின் தகன மேடை கடந்த இரண்டு மாத காலமாக மூடி கிடக்கிறது. இறந்தவர்களின் உடலை எரியூட்ட முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் கூறுகையில்,''ஊத்தங்கரை டவுன் பஞ்.,ல் உள்ள மின் தகன மேடை, தனியார் வசம் இருந்தபோது பராமரிப்பு பணிகள் மிகவும் சிறப்பாக இருந்தது. பஞ்., நிர்வாகம் கையகப்படுத்திய நிலையில், தற்போது பராமரிப்பு பணியில் ஏதுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தகனமேடை வளாகத்திலுள்ள பூங்காக்கள், மூலிகை செடிகள், பழம் தரும் மரங்கள் உள்ளன. அவைகளுக்கு நீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தகன மேடையை சரிசெய்ய வேண்டும்,'' என்றார்.இது தொடர்பாக, ஊத்தங்கரை டவுன் பஞ்., செயல் அலுவலர் ரவிசங்கரை தொடர்பு கொண்டபோது, தான் தற்போது தான் வந்துள்ளேன். விரைந்து தகன மேடை பழுதை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி