மேலும் செய்திகள்
சாலை விரிவாக்க திட்டப்பணிக்கு பூஜை
3 minutes ago
கோவில் நிலங்களில் மரக்கன்று நடும் பணி
3 minutes ago
ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்
4 minutes ago
கோவில் நிலம் ஏலம் கிராம மக்கள் எதிர்ப்பு
11 minutes ago
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், பாறையிலிருந்து தவறி விழுந்த யானை பலியானது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம், பெட்டமுகிலாளம் அடுத்த மூக்கங்கரை வனத்தில், உடல் அழுகிய நிலையில் ஆண் யானை இறந்து கிடந்தது. நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அங்கு சென்று, யானையின் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், அருகிலுள்ள பாறையில் இருந்து தவறி விழுந்து யானை உயிரிழந்தது தெரியவந்தது. ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் உத்தரவின்படி, இறந்த யானையின்இரு தந்தங்களும் அகற்றப்பட்டன.தொடர்ந்து, வன கால்நடை மருத்துவர் ஜெயச்சந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், யானையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின் மற்ற விலங்குகளுக்கு உணவாக யானையின் சடலம் வனத்தில் அப்படியே விடப்பட்டது. இறந்த யானைக்கு, 18 முதல், 20 வயது இருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
3 minutes ago
3 minutes ago
4 minutes ago
11 minutes ago