உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முதலீட்டிற்கு லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.6.57 லட்சம் மோசடி

முதலீட்டிற்கு லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.6.57 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தனப்பள்ளி அருகே வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம்மாள், 31; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 21 ல் இவரது, 'வாட்ஸாப்' எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், எங்கள் தயாரிப்புகளின் ஆர்டர்களை பதிவு செய்யும், பகுதிநேர வேலை என்றும், முதலீட்டு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, அவர்கள் அனுப்பிய வங்கி கணக்குகளில், 6.57 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன் பிறகு சுந்தரம்மாளை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை