உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீர் குழாயில் சாக்கடை நீர்

குடிநீர் குழாயில் சாக்கடை நீர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வந்தது. புகார் செய்த பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவர் ஆபாசமாக திட்டியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து புதிய வீட்டு வசதி வாரிய குடியியப்பு பகுதி இரண்டில் அரசு அலுவலர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குடியிருந்து வருகின்றனர். குடியிருப்பு பகுதி மக்களுக்கு பஞ்சாயத்து சார்பில் தெரு பொது குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டும் குழாயில் தண்ணீர் வரும் நிலையில் நேற்று மாலை குழாயில் தண்ணீர் வந்த போது, பெண்கள் குடிநீர் பிடித்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென்று குழாயில் இருந்து சாக்கடை நீர் வந்துள்ளது.அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு பி.டி.ஓ.,ஜெயபால் வந்து விசாரித்தார். தகவல் அறிந்த கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் பெருமாள் சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளுக்கு தகவல் கூறியவர்கள் யார் என்று கேட்டு அங்கிருந்த பொதுமக்களை ஆபாச வார்த்தையால் திட்டினார்.மேலும் அங்கு வந்த அவரது மகனும் பொதுமக்களை மிரட்டி ஆபாச வார்த்தையால் திட்டினார். இதனால், அதிர்ச்சியடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பஞ்சாயத்து தலைவரை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை