உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் கொசுவை ஒழிக்க மாநகர கமிஷனர் நடவடிக்கை

ஓசூரில் கொசுவை ஒழிக்க மாநகர கமிஷனர் நடவடிக்கை

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி அருகே உள்ள பெங்களூருவில், ஏ.டி.எஸ்., கொசுக்களால் மக்களுக்கு பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் கொசுக்களால், டெங்கு, சிக்கன்குனியா போன்ற பல்வேறு காய்ச்சல் பரவாமல் தடுக்க, மாநகராட்சி கமிஷனர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த, அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, லார்வா புழு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு மருந்து அடிக்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில், நீர் தொட்டிகள், குடங்கள், பேரல்கள், பழைய பூந்தொட்டிகள், டயர்கள், பிளாஸ்டிக் கப்புகள், இளநீர் சிரட்டைகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி