உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அடிப்படை வசதி கோரி கலெக்டர் ஆபீசில் மனு

அடிப்படை வசதி கோரி கலெக்டர் ஆபீசில் மனு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திருவணப்பட்டியை சேர்ந்த பவுன்ராஜ் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:எங்கள் பகுதியில், 200 குடும்பங்கள், 4 தலைமுறைகளாக வசிக்கின்றனர். ஆனால் எங்களுக்கு பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. ஒரே வீட்டில் மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கி, இடநெருக்கடியில் சிரமப்பட்டு வாழ்கிறோம். ஆதிதிராவிடர் நத்தம் பாதை நிலம் என, அரசு பதவி வீட்டில் இருந்தாலும், அங்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை.பஸ்சுக்கு செல்வதற்கு கூட ஒரு கி.மீ., துாரம் சென்றும், பள்ளிக்கு மாணவர்கள், 5 கி.மீ., நடந்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகள் கட்டியும், சாலை, பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை