உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் காரில் கடத்திய 2 பேருக்கு காப்பு

ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் காரில் கடத்திய 2 பேருக்கு காப்பு

ஓசூர்:தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த டாடா ஹாரியர் காரை நிறுத்தி சோதனை செய்த போது, 55 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தன.இதனால் காரில் வந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, அனுமந்த் சிங், 24, மோகிம், 20, ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். இதில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து, சேலத்திற்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 585 கிலோ புகையிலை புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மத்திகிரி ஸ்டேஷன் போலீசார், பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த ராயல் என்பீல்டு புல்லட்டை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது, 20,000 ரூபாய் மதிப்புள்ள, 292 கர்நாடகா மதுபான பாக்கெட்டுகள் இருந்தன. இதனால், புல்லட்டை ஓட்டி வந்த, கப்பக்கல் பகுதியை சேர்ந்த ரமேஷ், 39, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபானம், புல்லட் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை