உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகைப்பட கலைஞர்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் கிடைக்க தீர்மானம்

புகைப்பட கலைஞர்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் கிடைக்க தீர்மானம்

கிருஷ்ணகிரி : மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் சங்க செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் அசோக்பாபு தலைமையில் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டையை மாநில தலைவர் சிவக்குமார், மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் வழங்கி பேசினர். இதில், தமிழ்நாடு சங்கம் சார்பில் வழங்கக்கூடிய இலவச உயர் கல்வி திட்டத்தையும், இலவச மருத்துவ திட்டம் ஆகியவற்றை புகைப்பட கலைஞர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். மாவட்டத்திலுள்ள அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். புதிய தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சி வகுப்புகளை இலவசமாக வழங்க வேண்டும். புகைப்படம் சார்ந்த உபகரணங்களுக்கு, இலவசமாக பழுது நீக்கும் முகாம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், மாநில பொருளாளர் சுரேஷ், அமைப்பாளர் சரவணன், துணைத்தலைவர்கள் அசோக், பொன்னுசாமி, முன்னாள் மாநில நிர்வாகிகள் பிரேம்லால், மாதேஸ்வரன், பிரசன்னா, சூர்யா, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அன்பரசு, பொருளாளர் அருணாச்சலம், அமைப்பாளர் ஞானம், மாநில செயற்குழு உறுப்பினர் மகபூப்பாஷா உள்பட, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை