உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையோர செடி, கொடிகளுக்கு தீ வைப்பு கருகிய மா மரங்கள்; அச்சத்தில் விவசாயிகள்

சாலையோர செடி, கொடிகளுக்கு தீ வைப்பு கருகிய மா மரங்கள்; அச்சத்தில் விவசாயிகள்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி கூட்ரோடு பகுதியிலிருந்து காவேரிப்பட்டணம் செல்லும் சாலையிலுள்ள அத்திகானுார் கிராமம் அருகே கடந்த பிப்., 3ல் மர்ம நபர்கள் தீ வைத்ததில், சுப்பிரமணி என்பவரின் பராமரிப்பு இல்லாத விவசாய நிலத்தில் தீ பரவியது. இந்த தீ, அருகேயிருந்த ராமசாமி என்பவரின் மாந்தோட்டத்தில் பரவியதில், அவரின், 2 மாமரங்கள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட பைப் லைன்கள் சேதமானது. அடுத்த, 15 நாட்களுக்குள் அதே பகுதியில், பராமரிப்பு இல்லாத விவசாய நிலத்தில், மர்ம நபர்கள் வைத்த தீ, கொளுந்து விட்டு எரிந்தது. மேலும், அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊறுகாய் நிறுவனம் அருகே, விவசாய நிலத்தில், 20க்கும் மேற்பட்ட மா மரங்கள் எரிந்து நாசமானது. தொடர்ந்து, ஒரு மாதத்திற்கு மேலாக, இப்பகுதியில் மர்ம நபர்களின் அட்டகாசத்தால், விவசாய நிலங்களிலுள்ள மா மரங்கள் எரிந்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்துார் போலீசார், இது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'கண்ணன்டஹள்ளி டாஸ்மாக் கடையில், மது அருந்தி விட்டு, போதையில் சிலர் தீ வைத்து செல்கின்றனர். இதனால் அத்திகானுாரிலிருந்து காவேரிப்பட்டணம் செல்லும் சாலையோரத்தில், 3 கி.மீ., தொலைவிற்கு அடிக்கடி தீப்பற்றி எரியும் சம்பவம் நடக்கிறது. இதனால், இப்பகுதி விவசாயிகளின் மா மரங்கள் எரிந்து சேதமாகி வருகிறது. இச்சம்பவங்களால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை