உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆவணமின்றி எடுத்து சென்றதால் மேஸ்திரியிடம் ரூ.72,000 பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்றதால் மேஸ்திரியிடம் ரூ.72,000 பறிமுதல்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், ராயக்கோட்டை அடுத்த காடுசெட்டிப்பட்டி சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர்.அப்போது அவ்வழியாக வந்த காரில் சோதனை செய்தபோது, 72,000 ரூபாய் இருந்தது. காரில் வந்த, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மல்லாபுரத்தை சேர்ந்த மேஸ்திரி கிருஷ்ணன், 40, என்பவரிடம் விசாரித்தபோது, பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க எடுத்து செல்வதாக தெரிவித்தார்.ஆனால், உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், சூளகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ