உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

தர்மபுரி, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நவ., 4 முதல் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், வீடு, வீடாக வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது. இதில், வாக்காளர்கள் படிவத்தை பூர்த்தி செய்து, மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தபட்டது. அவ்வாறு, பெறப்படும் படிவங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுவதற்கான சிறப்பு முகாம்கள் நேற்றும், அதை தொடர்ந்து இன்றும் நடக்கிறது. எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பூர்த்தி செய்ய, வாக்காளர்களுக்கு அறிவுரை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணிகள், ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை