| ADDED : நவ 20, 2025 01:35 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூரில், அம்பேத்கர் அறிவகத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு நடந்தது. செந்தில் வரவேற்றார். கவிஞர் ஆதிமுதல்வன், காசி சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, வெறுப்பின் கொற்றம் வீழ்க, அன்பே அறம் என எழுதுக, என்ற தலைப்பில் பேசினார். விசாலாட்சி குமரனின் பூந்தளிர் எனும் நுால் வெளியிடப்பட்டது.இதையொட்டி, நடந்த கவியரங்கத்தில் நவகவி, ஆதி சவுந்தரராஜன், விஜயன், பிரேம்குமார் ஆகியோர் கவிதை வாசித்தனர். மாநாட்டில், காவாப்பட்டி குறிஞ்சி கிராமிய கலைக்குழு மற்றும் மொரப்பூர் கலைக்குழுவை சேர்ந்த கலைஞர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.