உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளிக்கு ஆன்ட்ராய்டு டிவி வழங்கிய டிரஸ்ட்

அரசு பள்ளிக்கு ஆன்ட்ராய்டு டிவி வழங்கிய டிரஸ்ட்

பாலக்கோடு : பாலக்கோடு ஈச்சம்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த பெபுல்ஸ் நிறுவனம் சார்பில், இந்த பள்ளிக்கு ஆன்ராய்டு 'டிவி' மற்றும் இணையதள வசதியை செய்து கொடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி, மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் எளிதாக கல்வி கற்க முடியும். மேலும் ஆயிரக்கணக்கான கதைகள், கட்டுரைகள், நீதிக்கதைகள், பொது அறிவு கேள்விகள், தற்போதைய பாடத்திட்டம் அனைத்தையும், ஆசிரியர்களின் உதவி இல்லாமலே மாணவர்கள் இதில் படிக்க முடியும்.தர்மபுரி மாவட்ட பொறுப்பாளரும், நெல்லிக்கனி நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனருமான விஜயராஜேந்திரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்த்டேவிட், தலைமை ஆசிரியர் சரவணகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை