உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கடைக்காரரை கத்தியால் தாக்கிய மாணவன் உட்பட இருவர் கைது

கடைக்காரரை கத்தியால் தாக்கிய மாணவன் உட்பட இருவர் கைது

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உளிவீரனப்பள்ளியை சேர்ந்தவர் முகமது இர்சாத், 34. பொம்மாண்டப்பள்ளியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார்; கடந்த, 17ம் தேதி மாலை, 4:10 மணிக்கு, இவரது கடைக்கு வந்த, 3 பேர், சில்லி சிக்கன் கேட்டனர். 30 நிமிடம் வரை காத்திருக்குமாறு முகமது இர்சாத் கூறியுள்ளார். ஆனால், 3 பேரும் உடனடியாக சில்லி சிக்கன் வழங்க கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, 3 பேரும் கத்தியால் முகமது இர்சாத்தை வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவர், புகார் படி, கொத்தகொண்டப்பள்ளியை சேர்ந்த மதன், 24, பொம்மாண்டப்பள்ளியை சேர்ந்த மதன்கோபால், 22, அதே பகுதியை சேர்ந்த அரசு ஐ.டி.ஐ.,யில், 2ம் ஆண்டு படிக்கும், 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிந்த மத்திகிரி போலீசார், மதன்கோபால் மற்றும் மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மதனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை