| ADDED : ஜூலை 13, 2011 04:12 AM
மதுரை:மதுரை நெல்பேட்டை காயிதேமில்லத் தெருவில் ஆடு வதை கூடம் செயல்பட்டது.
அதை மூட கோரி அப்துல்காதர் என்பவர், வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்
போது, ஆடு வதை கூடத்தை மூடுவதாக மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதன்படி கூடத்தை போலீஸ் பாதுகாப்புடன், கமிஷனர் செபாஸ்டின் தலைமையில்
அதிகாரிகள் கடந்த மாதம் மூடினர். அதையடுத்து வழக்கை ஐகோர்ட் கிளை பைசல்
செய்தது.நெல்பேட்டையில் ஆடு வதை கூடத்தை மீண்டும் செயல்பட அனுமதிக்க கோரி
மட்டன் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துராமலிங்கம் சார்பில் ஐகோர்ட்
கிளையில் மனு செய்யப்பட்டது. மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. அதை
எதிர்த்து மீண்டும் சங்கம் சார்பில் சீராய்வு மனு செய்யப்பட்டது.மனு
நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, சுந்தரேஷ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
மாநகராட்சி சார்பில் வக்கீல் எம்.ரவிசங்கர் ஆஜரானார். சீராய்வு மனுவை
தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டதில் எந்த குறையும்
காண முடியாது. அதில் ஏதாவது தவறு இருந்தால் மட்டுமே சீராய்வு மனு செய்ய
முடியும். மனு நிலைநிற்கத்தக்கது அல்ல, என குறிப்பிட்டது.