உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இடைத்தேர்தலை தவிர்த்த பின்னணி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., புதுவிளக்கம்

இடைத்தேர்தலை தவிர்த்த பின்னணி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., புதுவிளக்கம்

திருநகர்: 'தி.மு.க., ஆட்சியில் இடைத்தேர்தல் என்றால் அதிகாரம், பணப்பலத்தை பயன்படுத்தும். பல்வேறு இடையூறுகளை செய்யும். அதையெல்லாம் மீறி பல்வேறு நபர்களை பலி கொடுத்து விடக்கூடாது என்பதற்காகதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., தவிர்த்து விட்டது' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டால் கொலைகள் நடக்கின்றன. தி.மு.க., அரசு பொம்மை அரசாக உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்களால் இளைஞர்கள் வாழ்வு சீரழிகிறது. போதைப் பொருள்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதை தவிர்த்து, அவர்களுக்கு துணை போவது போல்தான் தி.மு.க., அரசின் செயல்பாடுகள் உள்ளன.ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில் கொடுத்து விட்டோம் என உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி சொல்வது தவறு. ஜூன், ஜூலைக்குரியது கொடுக்கவில்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. அ.தி.மு.க., மற்றும் இரட்டை இலையை காப்பாற்ற பழனிசாமி எடுக்கும் முடிவு அண்ணாமலைக்கு நம்பிக்கை துரோகமாக தெரிந்தால் அதை அ.தி.மு.க., தொண்டர்கள் முழுமையாக வரவேற்பார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை