உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., வுக்கு மாற்று அ.தி.மு.க., தான் சொல்கிறார் துரை எம்.பி.,

தி.மு.க., வுக்கு மாற்று அ.தி.மு.க., தான் சொல்கிறார் துரை எம்.பி.,

அவனியாபுரம்: ''தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு மாற்று அ.தி.மு.க.,தான் ''என ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை எம்.பி., தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவரது கட்சிக்கும் பேரிழப்பு. போலீசும், தமிழக அரசும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோல் என்பது ஒரு நல்லாட்சியை, அறநெறியோடு செயல்படுகின்ற ஆட்சியைக் குறிக்கும்.பூரண மதுவிலக்கு உள்ள குஜராத், உ.பி., யிலும் கள்ளச்சாராய மரணங்கள் நடைபெறத்தான் செய்கிறது. இது குறித்து மக்களுக்குத்தான் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மக்கள் ஒன்று கூடி மதுக்கடை வேண்டாம் என்று சொன்னால் அரசே நினைத்தாலும் திறக்க முடியாது.விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்திருக்கக் கூடாது. அதனால் பா. ஜ., தமிழகத்தில் வேரூன்ற வாய்ப்பாக உள்ளது. தி.மு.க., வுக்கு மாற்று அ.தி.மு.க., தான்.புதிய குற்றவியல் சட்டங்கள் ஜனநாயகத்திற்கு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. 150 எம்.பி., க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை