உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு ஓய்வூதியர் சங்க கூட்டம்

அரசு ஓய்வூதியர் சங்க கூட்டம்

திருநகர் : அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க திருப்பரங்குன்றம் வட்டக் கிளை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருநகரில் நடந்தது.தலைவர் தனபாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எர்னஸ்ட் தேவராஜ், செயற்குழு உறுப்பினர் சாந்தி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் பிச்சுமணி வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் நாராயணன் துவக்கி வைத்து பேசினார். செயலாளர் பன்னீர்செல்வம் அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் தீர்மானங்கள் வாசித்தார். பொருளாளர் நடராஜன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர் பாலமுருகன், துணைத்தலைவர் தினகர்சாமி பேசினர்.மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நிறைவாக பேசினார். துணைத் தலைவர் கீதா நன்றி கூறினார். பழைய ஓய்வூதிய திட்டங்களை விரைவில் அமல்படுத்த தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை