உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இந்தா பிடி; வேலை ரெடி; கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதாக கூறி மோசடி; ஏமாறுவோர், ஏமாற்றுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தா பிடி; வேலை ரெடி; கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதாக கூறி மோசடி; ஏமாறுவோர், ஏமாற்றுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுவோர் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.மதுரை கலெக்டர் அலுவலகம் எப்போதும் 'பிஸி'யாக இருக்கும். இதை பயன்படுத்தி இங்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்வோர் அதிகரித்துள்ளனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்புவது வாடிக்கையாக உள்ளது. தாங்கள் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை தெரிந்து வைத்திருப்பதாகக் கூறி ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்வோரும் உள்ளனர். நேற்று மேல அண்ணாதோப்பு சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு பகுதியைச் சேர்ந்த மயில்ராஜ் என்பவர் குடும்பத்துடன் இங்கு வந்தார். அவரை போலீசார் விசாரித்த போது, 'ஆன்லைன் விளம்பரத்தில் வேலை வாங்கித் தருவதாக ஒருவர் கூறியதைத் தொடர்ந்து ரூ.37 ஆயிரம் வரை பணம் செலுத்தியுள்ளதாகவும், அவர் கலெக்டர் அலுவலகம் வரச் சொன்னதாகவும், பணிநியமன உத்தரவு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவித்ததாவும்' கூறி அலைபேசியில் வந்த ஆதாரங்களை காட்டியுள்ளார். அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கும்படி அறிவுரை கூறி அனுப்பினர்.போலீசார் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பும் இப்பகுதி ஆட்டோக்காரர் ஒருவரும் மோசடி பேர்வழியால் கலெக்டர் அலுவலகம் வந்து ஏமாந்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பும் திருவண்ணாமலை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது மகன், உறவினர் என 2 பேருக்கு டிரைவர் பணிக்காக ஒருவரை நம்பி வந்ததாக தெரிவித்துள்ளார். இதற்காக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளதாகவும், தற்போது ரூ.2 லட்சத்துடன் வந்ததாகவும் கூறியுள்ளார். நாங்கள் அவருக்கு அறிவுரை கூறினோம். வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பணம் கேட்கும் நபரிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் குறித்த தகவல்களை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகாராக கொடுக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை