உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முறையான ஆவணங்களை பராமரித்தால் நிறுவனத்திற்கு தொழிலாளர் சட்டம் சாதகம் கருத்தரங்கில் தகவல்

முறையான ஆவணங்களை பராமரித்தால் நிறுவனத்திற்கு தொழிலாளர் சட்டம் சாதகம் கருத்தரங்கில் தகவல்

மதுரை, : மதுரை மடீட்சியா வர்த்தக தகவல் மையம் சார்பில் தொழிற்சாலையில் கடைப்பிடிக்க வேண்டிய ஆவணங்கள், சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். மதுரை தொழில்துறை பாதுகாப்பு இணை இயக்குநர் வேலுமணி, துணை இயக்குநர் சுடலை செல்வம், சிவகங்கை துணை இயக்குநர் கிஷோரிஜீ பங்கேற்றனர். தொழிலாளர் சட்டம் மறைமுகமாக நிர்வாகத்திற்கு எவ்வகையில் உதவுகிறது என்பதை சுடலை செல்வம் விளக்கினார். நிறுவனங்கள் என்னென்ன படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் பராமரிக்க வேண்டும், என்னென்ன சான்றிதழ் பெற வேண்டும் என்பதை விளக்கினார். முறையான ஆவணங்கள் இருந்தால் தொழிலாளர் சட்டம் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்றார்.தொழிலாளர்களின் ஆரோக்கியம் பாதுகாப்பு குறித்து சிவகங்கை கிஷோரிஜீ பேசினார். தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள், ஏன் பாதுகாப்பு அவசியம், அதற்கான வழிமுறைகள், எவ்வாறு அவற்றை நடைமுறைப்படுத்துவது என்பதை விளக்கினார். பாதுகாப்பு என்பது செலவினம் அல்ல முதலீடு என்றார்.நிறுவனங்கள், தொழிலாளர் இன்சூரன்ஸ் திட்டங்கள், இழப்பீடுகள், ஒப்பந்த முறைகள் குறித்து இணை இயக்குநர் வேலுமணி பேசினார். மடீட்சியா செயலாளர் கோடீஸ்வரன், பொருளாளர் பன்ஷிதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ