உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ஸ்டேஷனில் சிக்னல் இல்லாமல் தவித்த ரயில்கள்

மதுரை ஸ்டேஷனில் சிக்னல் இல்லாமல் தவித்த ரயில்கள்

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை சிக்னல் வேலை செய்யாததால் ரயில்கள் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிப்புக்குள்ளானது.மதுரை- - போடி ரயில்வே மின்பாதை ஆய்வுக்கான சோதனை ஓட்டம் நேற்று காலை நடந்தது. தலைமை மின் பொறியாளர் சித்தார்த்தா தலைமையில் குழுவினர் போடி வரை சென்று ஆய்வு செய்தனர். இதற்காக நேற்று காலை 9:00 மணிக்கு இன்ஜின் ஒன்று சோதனை ஓட்டத்துக்காக மதுரையிலிருந்து போடிக்கு புறப்பட்டது.மதுரை ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பு பகுதியை தாண்டும்போது தண்டவாளம் மேல் பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த வயர் மீது மோதியதால் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விபத்தை தவிர்க்க உடனே மின் இணைப்பை ரயில்வே பொறியாளர்கள் துண்டித்தனர். இதனால் ரயில்வே ஸ்டேஷனில் சிக்னல்கள் வேலை செய்யவில்லை.இதனால் மதுரை வரவேண்டிய ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சிக்னல் செயல்பட துவங்க ரயில்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை