உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கழிவுநீரால் கலங்கும் அச்சம்பட்டி மக்கள்

 கழிவுநீரால் கலங்கும் அச்சம்பட்டி மக்கள்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் அச்சம்பட்டி ஊராட்சி தெற்கு தெருவில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இத்தெருவில் சில ஆண்டுகளுக்கு முன் வடிகால் வசதியின்றி 'பேவர் பிளாக்' சாலை அமைக்கப்பட்டது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. வீடுகள் முன் தேங்குவதால் இப்பகுதி மக்கள் பல்வேறு சுகாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அப்பகுதி தனம் கூறுகையில், ''மண் ரோடாக இருந்தவரை நிம்மதியாக இருந்தோம். 'பேவர் பிளாக்' பதித்த பிறகு வடிகால் வசதி இல்லாததால் வீடுகள் முன் தெருவை ஆக்கிரமித்து கழிவுநீர் ஓடுகிறது. தெருக்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர். வீட்டின் வாசல் முன் மண், கற்களை வைத்து உயர்த்தி வைத்துள்ளனர். கழிவுநீர் தேங்கி முதியவர்கள், குழந்தைகள் நடக்க சிரமப்படுகின்றனர். கொசுத் தொல்லையால் காய்ச்சல் வருகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !