உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏலம் எடுத்தது ஒரு மரம் வெட்டுவது வேறு மரம்

ஏலம் எடுத்தது ஒரு மரம் வெட்டுவது வேறு மரம்

மேலுார் : பூதமங்கலம் ஊராட்சி நீர்வளத்துறை ஆரிக்கண்மாயில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஏலம் எடுத்த ஆறுமுகம் பலவகை மரங்களையும் வெட்டுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். விவசாயி மதி: வேறு வகையான மரங்களை வெட்டினால் அம்மரங்களின் மதிப்பை போல் பத்து மடங்கு அபாரத தொகை வசூல் செய்யப்படும் என்ற விதிக்கு கையெழுத்து இட்டார். தற்போது வேம்பு, வேலா, மஞ்சந்தி உள்ளிட்ட பல வகையான மரங்களை வெட்டி கூடுதல் விலைக்கு விற்றுள்ளார்.குத்தகைதாரர் ஆறுமுகம்: சீமைகருவேல மரங்களை அகற்ற ரூ.8850க்கு ஏலத்தில் எடுத்துள்ளேன். மரம் வெட்டுபவர்கள் தவறுதலாக வேறு வகையான மரங்களை வெட்டிவிட்டனர்.நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர்: ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை