உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., மா.செ.,க்கள் பதவிகளை பெற துவங்கியாச்சு முட்டல் மோதல்! மதுரையில் 5 ஆக உயர்கிறது மாவட்டம்

தி.மு.க., மா.செ.,க்கள் பதவிகளை பெற துவங்கியாச்சு முட்டல் மோதல்! மதுரையில் 5 ஆக உயர்கிறது மாவட்டம்

மதுரை : மதுரை தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர்கள் (மா.செ.,) எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கவுள்ள நிலையில் அப்பதவிகளை பெற நிர்வாகிகளுக்குள் 'முட்டல் மோதல்' போட்டிகள் அரங்கேறியுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு பின் கட்சியில் அமைப்பு ரீதியாக தி.மு.க., தலைமை சில மாற்றங்களை செய்ய தயாராகிறது. இதன்படி பல ஆண்டுகளாக கோலோச்சும் மா.செ.,க்களின் 'பவரை' குறைக்கும் வகையில் 234 தொகுதிகளுக்கு தற்போது 72 மா.செ.,க்கள் இருப்பதை, தலா 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மா.செ., என எண்ணிக்கையை அதிகரித்து பலருக்கு பதவி வாய்ப்புகள் வழங்கி உற்சாகப்படுத்த நடவடிக்கை தயாராகிறது.இதன் அடிப்படையில் மதுரையில் 3ல் இருந்து 5 மாவட்டங்கள் உருவாகவுள்ளது. இதன்படி நகர் மாவட்டத்தில் வடக்கு, மத்திய தொகுதிகளை பிரித்து ஒரு மாவட்டமாகவும், சோழவந்தான், உசிலம்பட்டியை உள்ளடக்கி மற்றொரு மாவட்டமாக உருவாகும் வாய்ப்புள்ளது. இம்மாவட்டங்களில் பதவிகளை கைப்பற்ற நிர்வாகிகளுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தற்போது மதுரை வடக்கு (கிழக்கு, மேலுார், சோழவந்தான்) மா.செ.,வாக அமைச்சர் மூர்த்தி, தெற்கு (திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி) மா.செ.,வாக மணிமாறன், நகர் (வடக்கு, மேற்கு, மத்தி, தெற்கு) மா.செ.,வாக தளபதி உள்ளனர். இதில், உசிலம்பட்டி, சோழவந்தானுக்கு கனிமொழி ஆதரவாளரான தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழனுக்கும், அமைச்சர் மூர்த்தி ஆதரவாளரான ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இளமகிழனுக்கு அதிக வாய்ப்புள்ளது.அதுபோல் நகரில் (வடக்கு, மத்தி) முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், மாநில மாணவரணி துணை செயலாளர் அதலை செந்தில் களத்தில் உள்ளனர். இதில் அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளரான அதலை செந்தில் முன்னிலையில் உள்ளார். அதேநேரம், அமைச்சர் தியாகராஜனே பதவியை கைப்பற்றும் வாய்ப்பும் உள்ளது என்கின்றனர்.

தி.மு.க.,வில் 'ஜப்பான்' கடுப்பு

லோக்சபா தேர்தல் முடிந்த பின் நகர் செயலாளர் தளபதி மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் ஜப்பானுக்கு ஜாலி டூர் சென்று திரும்பிய விவகாரத்தால் பிற நிர்வாகிகள் கடுப்பாகி அதிருப்தியில் உள்ளனர். இதனால் பல வட்ட, பகுதிச்செயலாளர்கள் அமைச்சர் தியாகராஜன் முகாமிற்கு 'ரூட்' மாறி வருகின்றனர். இது நகர் நிர்வாகத்திற்கு கடும் சவாலாக மாறியுள்ளது.

தி.மு.க.,வில் 'ஜப்பான்' கடுப்பு

லோக்சபா தேர்தல் முடிந்த பின் நகர் செயலாளர் தளபதி மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் ஜப்பானுக்கு ஜாலி டூர் சென்று திரும்பிய விவகாரத்தால் பிற நிர்வாகிகள் கடுப்பாகி அதிருப்தியில் உள்ளனர். இதனால் பல வட்ட, பகுதிச்செயலாளர்கள் அமைச்சர் தியாகராஜன் முகாமிற்கு 'ரூட்' மாறி வருகின்றனர். இது நகர் நிர்வாகத்திற்கு கடும் சவாலாக மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை