உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மனுக்களுக்கு தீர்வு காண ஏற்பாடு நடக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பரில் நடந்த நேர்முகத் தேர்வுக்கு பின் பெற்ற மனுக்களையும் சேர்த்து நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. 350 க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தாலும் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள், பேட்டரி பொருத்திய வீல்சேர் கேட்டு விண்ணப்பித்தவர்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உலகநாதன், டாக்டர்கள் ராஜேஷ்கண்ணா, சரவணமுத்து ஆகியோர் பயனாளிகளை தேர்வு செய்தனர்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கூறுகையில், ''தகுதியுள்ளோரை தேர்வு செய்து அரசுக்கு பட்டியல் அனுப்புவோம். அதன்பின் அரசு வழங்கியதும் உபகரணங்களை வழங்குவோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை