உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போலீஸ் செய்திகள்...

 போலீஸ் செய்திகள்...

பெண்ணிடம் மோசடி: இளைஞர் கைது மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் லாடனேந்தலைச் சேர்ந்தவர் மஞ்சுளா 53. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். இளைஞர் ஒருவர், அவரிடம் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறினார். அதை நம்பி ஏ.டி.எம்., கார்டை கொடுத்தார். வீட்டிற்கு வந்த பின் பார்த்தபோது, பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.28 ஆயிரம் கூடுதலாக பணம் எடுத்தது தெரிந்தது. சந்தேகமடைந்து ஏ.டி.எம்., கார்டை பார்த்தபோது அது போலியானது என தெரிந்தது. மாட்டுத்தாவணி போலீசில் அவர் புகார் அளித்தார். விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட வில்லாபுரம் சபரி கிருஷ்ணனை 33, போலீசார் கைது செய்தனர். 40 பேர் கைது மதுரை: ஒத்தக்கடையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் நீதிபதியை கண்டித்து சிலர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் மறுக்கவே, அவர்களில் 10 பெண்கள் உட்பட 40 பேரை கைது செய்தனர். -- மதுவிற்ற பள்ளி --------------------------ஊழியர் கைது திருமங்கலம்: உசிலம்பட்டி அருகே கருகட்டான்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி ஊழியர் சுரேஷ்குமார் 50. வேலுாரைச் சேர்ந்த இவர், உசிலம்பட்டியில் குடியிருக்கிறார். இவர் பாண்டிச்சேரியில் மது பாட்டில் வாங்கி உசிலம்பட்டியில் விற்பதாக தகவல் பரவியது. மதுரை நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிக் குமார், எஸ்.ஐ., சின்னமந்தையன் உட்பட போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ்குமார் மது விற்றது தெரிந்தது. அவரது வீட்டை சோதனையிட்டு, 27 மது பாட்டில்களை கைப்பற்றினர். அவரை கைது செய்த போலீசார் திருமங்கலம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை