உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜன.6ல் சக்தி சங்கமம் மகளிர் மாநாடு

ஜன.6ல் சக்தி சங்கமம் மகளிர் மாநாடு

மதுரை; மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஜன., 6ல் கேசவ சேவா கேந்திரம் சார்பில் சக்தி சங்கமம் மகளிர் மாநாடு நடக்கிறது.மாநில ஒருங்கிணைப்பாளர் கனிமொழி கூறியதாவது: இந்தியா முழுவதும் நடந்த 220 சக்தி சங்கமம் மாநாடுகளில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ஜன.,6 காலை 9:00 மணிக்கு பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்குகிறது. காலை 10:30 மணிக்கு யதீஷ்வரி கதாதப்பிரியா ஆசியுரை, மதியம் 12:30 துறை ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த கலந்துரையாடல் நடக்கிறது. மதியம் 2:30 மணிக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேசுகிறார். இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விக்டோரியா, ஸ்ரீமதி, பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி பங்கேற்கின்றனர். வழக்கறிஞர் கிருஷ்ணவேணி, உமாராணி, உமா ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை