உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தாமதமாகும் அரசு பஸ்கள் பரிதவிக்கும் மாணவர்கள்

 தாமதமாகும் அரசு பஸ்கள் பரிதவிக்கும் மாணவர்கள்

சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள், பொதுமக்கள் அவதியுறுகின்றனர். இங்குள்ள அரசு பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் படித்து வருகின்றனர். மாலையில் போதுமான பஸ்கள் இயக்கப்படாததாலும் தாமதமாக வருவதாலும் சிரமம் அடைகின்றனர். மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் 5:30 மணிக்கு வரும் எழுவம்பட்டி, 6:00 மணிக்கு வரும் உடன்காட்டுப்பட்டி பஸ்களில் வீட்டிற்கு திரும்பும் நிலை உள்ளது. பல சமயங்களில் சரியான நேரத்திற்கு பஸ்கள் வருவதில்லை. மேலும் பல 'ட்ரிப்'களும் 'கட்' ஆகின்றன. இதனால் பல மாணவர்கள் டூ வீலர்களில் 'லிப்ட்' கேட்டு செல்கின்றனர். நடந்தும் செல்கின்றனர். இரவு 7:00 மணிக்கு வீட்டிற்குச் செல்லும் நிலை உள்ளது. மாணவியருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மழைக்காலங்களில் நனைந்து கொண்டே வீடுகளுக்கு செல்லும் அவல நிலையும் உள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாகவும், கூடுதலாகவும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை