உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சென்னை சில்க்ஸ் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள்

 சென்னை சில்க்ஸ் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள்

மதுரை: மதுரை நகரில் மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ தங்கம் ஜூவல்லரி இணைந்து சமூகப்பண்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. டவுன் ஹால் ரோடு, நேதாஜி ரோடு, கிரைம் பிராஞ்ச், மதுரா கோட்ஸ் அருகில், திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு, பெரியார் பஸ் ஸ்டாண்ட் பாலம் அருகில், கட்டபொம்மன் சிலை அருகில் பொருத்தப்பட்டன. பொதுமேலாளர் வெங்கட் துரைராஜ் தலைமையில் போலீஸ் கமிஷனர் லோகநாதன் துவக்கி வைத்தார். துணைகமிஷனர்கள் இனிகோ திவ்யன், வனிதா, உதவிகமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயசங்கர், நாகராணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை