உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரன்னிங் ஆக மாறும் வாக்கிங் அரசரடி மைதானத்தில் திக்...திக்...

ரன்னிங் ஆக மாறும் வாக்கிங் அரசரடி மைதானத்தில் திக்...திக்...

மதுரை : மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் அதிகாலை இருட்டில் 'வாக்கிங்' செல்வோர் விழுந்து அடிபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்விளக்குகள் இருந்தும் எரியாததே இதற்கு காரணம்.இம்மைதானத்தில் தினமும் அதிகாலை 4:30 மணி முதல் 10:00 மணி வரை நுாற்றுக்கணக்கானவர்கள் 'வாக்கிங்' செல்கின்றனர். இதற்கு மாதம் ரூ.250 கட்டணம். மைதானத்தில் இரண்டு 'வாக்கிங்' டிராக்குகள் உள்ளன. உள்ளே இருப்பது மண் டிராக். வெளியே இருக்கும் டிராக்கில் சிமென்ட் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளது. வெளி டிராக்கில் அதிகாலை இருட்டில் விளக்குகள் எரிவதில்லை. மின் விளக்குகள் இருந்தும் அவை எரியாமல் 'வாக்கிங்' செல்பவர்களை சில வாரங்களாக வேடிக்கை பார்க்கின்றன.இருட்டில் பல நேரங்களில் பாம்புகள் 'நானும் வர்றேன்' என குறுக்கிடுவதால் வாக்கிங் 'ரன்னிங்' ஆக மாறுகிறது. எந்த நேரமும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம். ரயில்வே ரிக்ரியேஷன் சங்கத்தில் விசாரித்த போது, 'மின்வாரியம் தான் மின் கம்பத்தில் இருந்து சப்ளை தரவில்லை' என்கின்றனர். பலமுறை ரயில்வே தரப்பில் சொல்லியும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. 'வாக்கிங்' செல்வோர் நலன்கருதி உடனடியாக மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ