உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெற்றிலை விலை சரிவால் ப.வேலுார் விவசாயிகள் கவலை

வெற்றிலை விலை சரிவால் ப.வேலுார் விவசாயிகள் கவலை

ப.வேலுார்: தொடர் மழையால் வெற்றிலை விளைச்சல் அதிகரித்து, விலை சரிந்துள்ளதால் பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனுார், குப்பிச்சிபாளையம், பொத்தனுார், பாண்டமங்கலம், அண்ணா நகர், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் வெள்ளைக்கொடி, கற்பூரி வெற்றிலையை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். விளைந்த வெற்றிலைகளை பறித்து, 100 வெற்றிலை கொண்டது ஒரு கவுளியாகவும், 104 கவுளி கொண்டது ஒரு சுமையாகவும் தயார் செய்கின்றனர். இதனை, பாண்டமங்கலம், பொத்தனுார், வேலுார் பகுதியில் உள்ள வெற்றிலை மண்டிகளுக்கும், ப.வேலுார் - கரூர் சாலையில் செயல்பட்டு வரும் வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த வாரம், 'முதிகால்' வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை, 1,500 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 1,000 ரூபாய்க்கும்; கற்பூரி வெற்றிலை ஒரு சுமை, 1,000 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 700 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது, தொடர் மழையால் வெற்றிலை விளைச்சல் அதிகரித்து, அதன் விலை சரிந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் வெற்றிலை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி