உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நிறைவு 460 பேருக்கு ரூ.14.79 கோடியில் நலத்திட்டம்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நிறைவு 460 பேருக்கு ரூ.14.79 கோடியில் நலத்திட்டம்

நாமக்கல்: கொல்லிமலையில் நடந்த, 'வல்வில் ஓரி' நிறைவு விழாவில், 460 பேருக்கு, 14.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், 'வல்வில் ஓரி' நிறைவு விழா நடந்தது. எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்து, பயனா-ளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், கொல்லிமலையின் இயற்கையை பாது-காக்க, 2 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட மதிப்பீடு உரு-வாக்க உத்தரவிட்டுள்ளார். இப்பகுதி சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், மின்சாரத்தில் இயங்கக்கூடிய பேட்டரி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, 136 பயனாளிகளுக்கு, 3.44 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்-டுள்ளன. மேலும், 'கனவு இல்லம்' திட்டத்தில், 324 பேருக்கு, 11.34 கோடி ரூபாய் மதிப்பில், வீடு கட்டுவதற்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, வல்வில் ஓரி மற்றும் சுற்றுலா விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, 211 பள்ளி மாணவ, மாணவியர், 24 கல்லுாரி மாணவ, மாணவியர், கலை பண்பாட்-டுத்துறையின், 40 கலைஞர்கள், வில்வித்தை, பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் உள்ளிட்டோ-ருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.மேலும், பணி விளக்க கண்காட்சி அரங்கில் முதலிடம் பெற்ற வனத்துறை, இரண்டாமிடம் பெற்ற, கால்நடை பராமரிப்புத்-துறை, மூன்றாமிடம் பெற்ற சித்த மருத்துவ துறைக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ