மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
நாமக்கல்: 'நாமக்கல்லில், வரும், 21ல் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட உதவி வழங்கும் முகாம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:திருநங்கைகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் வகையில், அரசுத்துறைகள் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் திருநங்கைகளின் விபரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கிட, சிறப்பு முகாம், வரும், 21ல் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.இந்த முகாமில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் கலந்து கொண்டு, கோரிக்கை மனுக்களை அளித்து, தங்களுக்கு தேவையான அரசு உதவிகளை பெற்று பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025